காதலர் தினம்

 


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ


"காதலர் தினம்"



ஓர் இஸ்லாமிய பார்வை - பாகம் 01


🎙️ஆக்கம்:-Imtiyas Yusuf (Salafy)


"சீரழிந்து போன ஒரு சமூகத்தின் நாற்றம் வீசும் கலாசாரத்தின் நாகரீகப் பெயர் காதலர் தினம்."


இளசுகளின் மனம் மறந்தவிடாது அலைபாயும் ஒரு தினம் என்றால் பெப்ரவரி 14ம் திகதி காதலர் தினம்!

எல்லோரும் பெப்ரவரி 14ம் திகதியை மனமகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறார்கள்.

வாலிபர்கள், வயோதிபர்கள், தம்பதிகள் என்று பலரும் பூச்செண்டு, பரிசுப் பொருட் கள் கொடுத்து வாழ்த்து தெரிவிக்கிறார்கள். விஷேடமாக இளம் வாலிபர்கள் தங்களுடைய காதலை புனிதப் படுத்தக் கூடியதாக அத்தினத்தை பூஜிக்கிறார்கள்.

தனது பிறந்த நாளை மறந்துவிட்டாலும், ‘காதலர் தினத்தை’ மறந்தவிட முடியாத நிலையில் இத்தினம் பிரசித்தம் பெற்றுவிட்டது.

சர்வதேச ரீதியாக பல தினங்கள் விஷேட தினங்களாக கொண்டாடப்படுகிறன.


– போதை ஒழிப்புத் தினம்


– சிறுவர், முதியோர் தினம்


– சூழல் பாதுகாப்புத் தினம்


– சேமிப்புத் தினம்


– மகளிர் தினம்


– அன்னையர் தினம்


– தொழிலாளர் தினம்


இத் தினங்கள் பற்றிய அறிவும் ஆர்வமும் காணக்கிடைப்பது அரிது.


"காதலர் தினம்" மேற்கத்திய உலகில் சீரழிந்து போன கலாசாரத்தின் சிந்தனையால் உருவான தினம்!

இரவு பண்ணிரெண்டு மணிக்கு காதலர்கள் ஒன்று கூடி முத்தமிடுவதும் பூச்செண்டுகளை பறிமாறுவதும் பரிசில்களை கொடுப்பதும் உல்லாசமாக ஊர்சுற்றுவதும் தனித்து நின்று உறவுகொள்வதும் மிகப்பெரிய நாகரீகம்.

நாளொருவண்ணம், பொழுதொரு மேனியாக ஆண் பெண் உறவு (காதலர் காதலி உறவு) மாறிக் கொண்டேயிருக்கும்.

"ஒருவனுக்கு ஒருத்தி" என்ற நிலை மாறி "ஒருவருக்கும், ஒருத்திக்கும் பலபேர்" என்று சாதாரணமாகிவிட்டது.

அதனை பிரதிபலித்துக் காட்டுவது தான் மேற்கத்திய உலகின் "காதலர் தினம்”!

கற்பு, கன்னித்தன்மை பற்றி அங்கே யாரும் அலட்டிக் கொள்வதில்லை.

பரஸ்பரம் உடம்புகளை பரிமாறிக் கொள்வதில், கண்டவர் உடன் கூடிக் கொள்வதில் அலாதியான திருப்தி அவர்களுக்கு!

இளம் பெண்களின் உடைகளை உரித்தெடுத்து பவனிவரவிடுவதும் அதற்கு புள்ளிகள் போட்டு கிரீடம் சூட்டுவதும் அவர்களுடைய பொழுதுபோக்கு!

அழகு ராணி எனும் பெயரில் பெண்களின் அங்கங்களை அளந்து பார்த்து ரசிப்பதும் ருசிப்பதும் அவர்களுடைய கௌரவமான பொழுதுபோக்கு!

பெண்ணின் கற்பை மயக்க மருந்தாக உட்கொள்வதற்கான அத்தனை வாய்ப்புக்களையும் வழிகளையும் தாராளமாக ஏற்படுத்தி கொள்கிறார்கள்.

அதற்காகவே பல தினங்களை பல சந்தர்ப்பங்களை ஏற்டுத்துகிறார்கள்..

அமெரிக்க பாடகி மடோனா கூறும் போது, "என்னுடன் படுக்கையைப் பகிர்ந்து கொண்ட அமெரிக்கா வீ.ஐ.பி.க்களின் பட்டியலை நான் எடுத்து விட்டால், அவர்களுடைய "பெரிய மனிதர்" இமேஜ் அத்தோடு காலி" என்றாள்.

மேலை நாடுகளில் பிள்ளைகளுக்கு தாய் சொல்லும் அட்வைஸ்,

"மகளே! யாரோடு கூடினாலும் கருத்தடை உறையை பாவிக்க மறந்திடாதே!" என்பது தான்.

கற்பை இழந்தாலும் கர்ப்பத்தோடு வராதே என்பது தார்மீக மந்திரம்!


பாடசாலை செல்லும் பிள்ளைகளும் தொழிலுக்கு செல்லும் பெண்களும் தங்களது பைகளில் (Bags) களில் கருத்தடை மாத்திரை, கருத்தடை உறை வைத்துக் கொள்ள மறந்திடமாட்டார்கள்.

திருமணத்திற்கு முன் கன்னித் தன்மை இழத்தல், கர்ப்பம் தரித்தல், கர்ப்பத்தை கலைத்தல், ஏன் குழந்தையை பெற்றெடுத்தல் எல்லாம் சர்வ சாதாரணமான விடயம். பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை.

அப்பன் பெயர் தெரியாத குழந்தைகளும் அம்மா பாசம் இல்லாத பிள்ளைகளும் நாளுக்கு நாள் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள்.


இவர்களது "உல்லாச புரியை" தான் காதலர் தினமாக அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள்.

மீடியாக்களாலும் ஜனரஞ்சக தினமாக அறிமுகப்படுத்தப்படுகிறது.

சீரழிந்து போன ஒரு சமூகத்தின் நாற்றம் வீசும் கலாசாரத்தின் நாகரீகப் பெயர் காதலர் தினம்.


நாறிப்போன இந்த அனாச்சாரம் கீழைத்தேய நாடுகளில் அரங்கேற்றப்படுகிறது.


நாகரீகத்தை புரிந்து கொண்டவர்களால் நாற்றம் வீசும் அம்சங்களை புரிந்து கொள்ள முடியாமல் போயுள்ளது.


இறைவன் எம் அனைவரையும் பாதுகாப்பானாக!!!


இன்ஷா அல்லாஹ்

கருத்துகள்