காதலர் தினம். - இஸ்லாமிய பார்வை
"காதலர் தினம்" Valentine's Day (இஸ்லாமிய பார்வை) "உங்களில் ஒருவர் ஒரு தீமையை (மார்க்கத்திற்கு முரணான ஒரு செயலை)க் கண்டால் அவர் அதைத் தமது கரத்தால் தடுக்கட்டும். முடியாவிட்டால் தமது நாவால் (சொல்லித் தடுக்கட்டும்). அதுவும் முடியாவிட்டால் தமது உள்ளத்தால் (அதை வெறுத்து ஒதுக்கட்டும்). இந்த (இறுதி) நிலையானது, இறை நம்பிக்கையின் பலவீனமா(ன நிலையா) கும்." ஸஹீஹ் முஸ்லிம் சீரழிந்த மேற்கத்தேய கலாசாரம் ஈன்றெடுத்த குழந்தை தான் இன்றைய காதலர் தினமும் அது தொடர்பான நிகழ்வுகளுமாகும். சர்வதேச ரீதியில் முதியோர் தினம், அன்னையர் தினம், ஆசிரியர் தினம் என வருடந்தோறும் எத்தனையோ தினங்கள் கொண்டாடப்பட்ட போதிலும் மற்ற தினங்களை விட காதலர் தினமே உலகில் அதிக மக்களால் கொண்டாடப்படுகிறது. காதலர் தினத்தின் தோற்றம் காதலர் தினம் தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் நிலவிய போதிலும் அதில் பிரபல்யமான கருத்தை சுருக்கமாக நோக்குவோம். ரோமானிய அரசன் இரண்டாம் குளோடியஸ் என்பவன் காதல், த...
